தந்தையின் நண்பர் வீட்டில் நகை திருட்டு.. காதலனுக்கு கேடிஎம் பைக் கிஃப்ட்.. இளம்பெண் செய்த பகீர் செயல்!

பொள்ளாச்சி அருகே தந்தையின் நண்பர் வீட்டில் ஒன்பது சவரன் தங்க நகைகளை திருடி விற்று காதலனுக்கு கேடிஎம் பைக் வாங்கி கொடுத்த கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராஜேஷ். இவரது 19 வயது மகள் ஜாய் பிரியன்சி. பொள்ளாச்சியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம்.சி.ஏ., படித்து வருகிறார். கடந்த 16ஆம் தேதி ஊஞ்சவேலம்பட்டியில் உள்ள தந்தை ராஜேஷின் நண்பரான தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு ஜாய் பிரியன்சி சென்றுள்ளார். அதன் பின்னர் அந்த வீட்டில்.. பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒன்பது சவரன் தங்கச் செயின் காணாமல் போனதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் நண்பனின் மகளான மாணவி ஜாய் பிரியன்சி தனது வீட்டிற்குச் சென்று வந்த பின்னரே நகை திருடுபோனதாக அவர் கூறி உள்ளார். இதனால் போலீசாரின் சந்தேகம், மாணவி மீது திரும்பியது. ஒவ்வொரு அசைவுகளையும் லிஸ்ட் எடுத்து விசாரிக்க, தந்தையின் நண்பர் வீட்டில் 9 சவரனைத் திருடி பொள்ளாச்சியில் உள்ள ஒரு நகைக்கடையில் 2.5 லட்சத்திற்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

