Politics
இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிக்கப்படவுள்ளது குறித்து...
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிக்கப்படுவார்கள் என, கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சி கூட்டம் இன்று (செப். 9) நடைபெற்றது.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காதர் மொகிதீன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாணிக்கம் தாகூர் பேசியதாவது:
''மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்ற பெயர் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வது கூட்டத்தில் செயல்திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான இக்கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படும்.
பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும். இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாகவே மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி இருக்கும்'' எனக் குறிப்பிட்டார்.
Maduranthakam tharapuram By election: TVK alliance candidates to be announced tomorrow
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.