Religion
வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா
கும்மிடிப்பூண்டி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கவரைப்பேட்டை வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா நடந்தது.
கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையில், ராதா, ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 21ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிகள், கடந்த 4ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகின்றன.
முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் உள்ள யாதவர் குடும்பத்தினர் சார்பில், உறியடி விழா நடைபெற்றது. உறியடி கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்தி அருள்பாலித்தார்.
தொடர்ந்து, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என, ஏராளமானோர் உறி அடித்து கொண்டாடினர். கவரைப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள், உறியடி விழாவில் பங்கேற்று, கண்ணனை வழிபட்டனர்.