Religion
கிருஷ்ண ஜெயந்தி விழாவில் உறியடித்து மக்கள் வழிபாடு
பவானிசாகர்:பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தில், வேணுகோபாலசுவாமி, கருடபகவான், கோபாலகிருஷ்ணர் கோவில்கள்
அடுத்த தொட்டம்பாளையத்தில், வேணுகோபாலசுவாமி, கருடபகவான்,
கோபாலகிருஷ்ணர் கோவில்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும்
கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
மாலை உட்டி மரம் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. 100 அடி உயர
பச்சை மூங்கில் மரத்தை, பவானி ஆற்றுக்கு பக்தர்கள் கொண்டு சென்று சிறப்பு
பூஜை செய்தனர். அதில் தேங்காய் ஒன்றை கட்டி கோவில் முன்புறம் நட்டனர்.
நேற்று காலை சிறப்பு பூஜை, பஜனை நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00
மணியளவில் கருட வாகன சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதியுலா
தொடங்கியது. இதையடுத்து இரவில் உறியடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது.
மூங்கில் மரத்தில் கட்டப்பட்ட தேங்காயை குச்சி மூலம் உடைக்க பக்தர்கள்
முயற்சித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.