Politics
பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம், தலைவர் சோபனா தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் தினகரன் முன்னிலை வகித்தார். மேற்பார்வையாளர் கோகிலா பேசினார்.
2026 – 28ம் ஆண்டுக்கான புதிய தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், தேர்தல் நடத்தை முறைகள், விதிகள் குறித்து விளக்கப்பட்டன.
தொடர்ந்து நடந்த தேர்தலில், பள்ளி லேமாண்மை குழு தலைவராக அனுசுயா தேவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பெற்றோர்கள், உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி ஆசிரியர் சத்தியா நன்றி கூறினார்.