Politics
திருப்புட்குழி தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
பள்ளி மேலாண்மை குழு என்பது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும், செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் உருவாக்கப்படும் உள்ளூர் குழு.
நேற்று நடந்த இக்குழு கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜி.செல்வகுமார் வரவேற்றார். இக்கூட்டத்தில் புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் விவரம்: தலைவராக மீனா, துணைத் தலைவராக கவிதா, ஆசிரியர் பிரதிநிதியாக மெஹ்தாப் பர்வீன் ஆகியோருடன் 12 பெற்றோர் உறுப்பினர்கள், இரண்டு உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒரு கல்வியாளர் மற்றும் நான்கு முன்னாள் மாணவர்கள் உட்பட மொத்தம் 24 பேர் கொண்ட புதிய பள்ளி மேலாண்மை குழு தேர்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், பள்ளியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நீண்ட நாட்களாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும், ஸ்ரீபெரும்புதுார் த.வெ.க., - எம்.எல்.ஏ.,வும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சருமான தென்னரசுவை நேரில் சந்தித்து மனு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.