Politics
இடைத்தேர்தல்; பாஜக ஆதரவைக் கோரும் அதிமுக… நயினாரை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு.
தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உட்பட மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்தபிறகு, இந்தத் தொகுதிகளின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமாரவேல், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.
