Religion
மோகனுார் காவிரி ஆற்றில் 550 விநாயகர் சிலை கரைப்பு
மோகனுார்:நாமக்கல், சேலம் மாவட்டங்ளில் வைத்து பூஜிக்கப்பட்ட, 550க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை,
சேலம் மாவட்டங்ளில் வைத்து பூஜிக்கப்பட்ட, 550க்கும் மேற்பட்ட
விநாயகர் சிலைகளை, வாகனங்களில் ஏற்றி வந்து மோகனுார் காவிரி ஆற்றில்
கரைத்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த, 14ல் கோலாகலமாக
கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில்
தயாரிக்கப்பட்டு விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில், போலீசார் சார்பில், 765 இடங்களில் சிலைகள்
வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செய்யப்பட்ட சிலைகளை, வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு
நீர்நிலைகளில் கரைத்தனர். இதற்காக, காவிரி கரையோர பகுதிகளான
மோகனுார், ப.வேலுார், ஜேடர்பாளையம், சோழசிராமணி, பள்ளிப்பாளையம்
உள்ளிட்ட இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று, பூஜிக்கப்பட்ட சுவாமி சிலைகளை, சரக்கு வாகனம், லாரிகளில்
ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, காவிரி ஆற்றில் கரைத்தனர். மோகனுார்
காவிரி ஆற்றில், நாமக்கல், சேலம், மல்லுார், ராசிபுரம் மற்றும் சுற்று
வட்டாரங்களில் பூஜிக்கப்பட்ட, 550க்கும் மேற்பட்ட சிலைகளை காவிரி
ஆற்றில் கரைத்தனர். இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில், ஏராளமான
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்தினம், 65 சிலைகள் கரைக்கப்பட்டன. நேற்று காலை முதல், இரவு, 10:00
மணி வரை, மேலும் சிலைகள் கைரக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.