Religion
1,780 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 1,780 இடங்களில் விநாயகர் சிலைகள், நேற்று பிரதிஷ்டை செய்து, சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வழக்கம் போல், நகரம் மற்றும் கிராமப்புறங்களில், முக்கிய சந்திப்புகளில், பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தன.
விழுப்புரத்தில், பழைய பஸ் நிலையம், ரயில் நிலையம், மந்தக்கரை, முத்தோப்பு, சித்தேரிக்கரை, வடக்குத் தெரு, மேல்தெரு, வண்டிமேடு, தந்தை பெரியார் நகர், சாலாமேடு, வி.மருதுார், நரசிங்கபுரம், கே.கே.ரோடு, மகாராஜபுரம், கீழ்ப்பெரும்பாக்கம், பாணாம்பட்டு, ஆனாங்கூர், கண்டமானடி, அரியலுார், கண்டம்பாக்கம், மரகதபுரம், காணை, கெடார், வளவனுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 5 அடி முதல் 10 அடி உயரம் வரை பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கற்பக விநாயகர், வலம்புரி விநாயகர், சித்தி விநாயகர், பல்வேறு வாகனங்களில் அமர்ந்த விநாயகர் என விதவிதமான உருவங்களில் வடிவமைக்கப்பட்டிருந்த இச்சிலைகளுக்கு பந்தல் அமைத்து, மாலை சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
விழுப்புரம் பகுதியில் 450 சிலைகளும், திண்டிவனம் பகுதியில் 320 சிலைகளும், செஞ்சி பகுதியில் 450 சிலைகளும், கோட்டக்குப்பம் பகுதியில் 210 சிலைகளும், விக்கிரவாண்டி பகுதியில் 350 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததுது.
மாவட்டம் முழுதும், 1780 சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது. மேலும், மாலை நேரங்களில் கூடுதலாக பல இடங்களில் சிலைகள் அமைத்து வழிபாடுகள் நடந்ததால், எண்ணிக்கை 1,800க்கும் அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சிலைகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வழிபாடுகள் முடிந்து, 16ம் தேதி மற்றும் 5ம் நாள் 18ம் தேதியும் ஊர்வலமாக எடுத்துச் சென்று, அரகண்டநல்லுார், செஞ்சி, மரக்காணம், கோட்டக்குப்பம், கடலுார் பகுதிகளில் உள்ள கடற்கரைகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.