விநாயகர் சதுர்த்தி, சுபமுகூர்த்த தினத்தையொட்டி வாழை இலை உயர்வு

விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி காய்கறி சந்தையில் வாழை இலை மற்றும் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது.
((தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாழைத்தார்கள் விளைச்சலும் குறைவாக இருப்பதாலும்)) வாழைத்தார்கள் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சிறிய இலை வாழை கட்டு ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து விற்பனையாகிறது. பெரிய இலை கட்டு 8 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையாகிறது.