வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகைகள் திருட்டு
கடலுார், செப். 15– கடலுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் ரூ. 8 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம
கடலுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் ரூ. 8 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி அடுத்த சிங்கிரிகுடியைச் சேர்ந்தவர் வாசுதேவன்,38; இவர், தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள தங்கையின் மகள் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க சென்றார். விழா முடிந்து நேற்று காலை வீ்ட்டிற்கு வந்தார்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறக்கப்பட்டு வளையல், நெக்லஸ் என, 8 சவரன் நகை, 30,000 ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சமாகும். . கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
இதுகுறித்து புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.