பழ வியாபாரி வீட்டில் 7 சவரன் நகை திருட்டு
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், பல்லாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த், 28. இவர், தர்மபுரியில் தங்கி, பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா, 25. வீட்டில் வசித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதியிலுள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று காலை, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, அக்கம் பக்கத்தினர் வித்யாவிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 7 பவுன் நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள், 1.50 லட்சம் ரூபாய் உண்டியல் பணம், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
கந்திலி போலீசார் விசாரிக்கின்றனர்.