Health
குடிநீரில் கொசுப்புழு கண்டறிந்தால்அபராதம்: நகராட்சி எச்சரிக்கை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படுகிறது. துப்புரவு ஆய்வாளர்கள் ஆய்வின் போது குடிநீரில் கொசுப்புழுக்கள் தென்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளிலும் கலெக்டர் சிவகுருபிரபாகரன் உத்தரவின் பேரில் கமிஷனர் குமரன் அறிவுறுத்தலின் படி நகர் நல அலுவலர் ரெத்னகுமார் தலைமையில் நகர் பகுதியில் கொசுப்புழு வளரிடங்களை கண்டறிந்து அளிக்கும் பணி, கொசு மருந்து தெளிக்கும் பணி மற்றும் காய்ச்சல் கண்ட நபர்களின் கணக்கெடுப்பு பணிகள் உள்ளிட்ட டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை அதிகளவில் கொசுப்புழு வளரும் இடங்கள் வைத்திருந்த வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அறிவிப்பு வழங்கி ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது வீட்டில் தேவையில்லாத பொருட்களை திறந்த வெளியில் மழைநீர் தேங்காதவாறு சேமித்து வைத்திருக்க வேண்டும். தண்ணீரை கொசு புகாதவாறு துணியால் மூடி வைத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி பணிகளை துப்புரவு ஆய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ––––