Politics
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் ரெய்டு; மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு பள்ளிக்கல்வித் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. இதனிடையே நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில் தான் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஸ் இல்லத்தில் தற்பொழுது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மட்டுமில்லாமல் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கி தருவதாக கூறி பல கோடி பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில், சென்னை, திருச்சியில் அன்பில் மகேஷ் தொடர்புடைய 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)