Politics
திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் வீடு உட்பட 6 இடங்களில் சோதனை

திருச்சி: திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மகேஷ். அப்போதை ஆட்சியில் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தல் பணிகளுக்கு 100 கோடி ரூபாய் வரை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான புகாரில் திமுக நிர்வாகி அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டசபையில் மகேஷ் மீது நிதியமைச்சர் மரியவில்சன் லஞ்சப்புகார் கூறியிருந்தார். இந்நிலையில், திருச்சி, தென்னூரில் உள்ள முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை உட்பட 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள அரசகுமாருடன் தொடர்பு என்ற புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
களத்தில் தினமலர்!
திமுக மாஜி அமைச்சர் மகேஷ் வீட்டில் அதிகாலை இறங்கிய போலீஸ் டீம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
சிறப்பு வீடியோ!
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

