Politics
லஞ்சப் புகார்; முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் அதிரடி சோதனை!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் இன்று (16-09-26) காலை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளி அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழை பெறவும் தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது. அதாவது இந்த லஞ்சப் புகாரில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெயரும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பி.டி.அரசகுமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து 2 வாகனங்களில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திருச்சிக்கு சென்று போலீஸ் பாதுகாப்புடன் அன்பில் மகேஸ் இல்லம் உள்பட அவருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)