Religion
ஆர்.கே.எஸ்., பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நட்சத்திர மழலையர் பிரிவில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவன தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். இயக்குநர் மனோபாலா, செயலாளர் கோவிந்ராஜ், நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார்.
தொடர்ந்து நடந்த மாணவர்களின் மாறுவேடப் போட்டியில் கிருஷ்ணர், ராதை வேடங்களை அணிந்து தங்களது திறன்களை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர் ராகேல் ஜாய்ஸ்மேரி, உடற்கல்வி இயக்குநர் சத்தியராஜ் ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி நுாலக ஆசிரியர் நீலகண்டன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பள்ளி துணை முதுல்வர் உலகநாதன் நன்றி கூறினார்.