Lifestyle and human interest
73ஆவது உலக அழகி போட்டி.. பட்டம் வென்றது யார்..? எந்த நாட்டை சேர்ந்தவர் தெரியுமா..?

44 ஆண்டுகளுக்க பிறகு அந்நாட்டைச் சேர்ந்தவருக்கு உலக அழகி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் நடைபெற்ற 73ஆவது உலக அழகி போட்டியில் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மொலா டொமிங்கஸ் மகுடம் சூடினார்.
நடப்பாண்டு போட்டியில் 111 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் எரித்தியா, ஸ்பெயின், மலேசியா, வியட்நாம், டொமினிகன் குடியரசு, தென் ஆப்ரிக்காவை சேர்ந்த போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதில் டோமினிகன் குடியரசின் 24 வயதான ஜோஹெய்ரி மொலா வெற்றிபெற்றார்.
ஆசிரியர், பத்திரிகையாளர் மற்றும் சமூகப் பணியாளர் என பன்முகம் கொண்ட ஜோஹெய்ரி மொலா தனது வெற்றியின் மூலம் டொமினிகன் குடியரசின் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 44 ஆண்டுகளுக்க பிறகு அந்நாட்டைச் சேர்ந்தவருக்கு உலக அழகி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர் அப் ஆகவும், மலேசியாவின் டானுசியா செட்டி இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் தேர்வாகினர்.
