Lifestyle and human interest
2026ம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றார் டொமினிகன் நாட்டின் பெண் ஜோஹெய்ரி மோலா!
-நமது நிருபர்-வியட்நாமில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், டொமினிகன் குடியரசைச் சேர்ந்த

வியட்நாம் நாட்டின் நஹா ட்ராங் நகரில் 73வது உலக அழகிப் போட்டி நடந்தது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் நிகிதா போர்வால் கலந்து கொண்டு முதல் 40 இடங்களுக்குள் முன்னேறினார். இறுதிப் போட்டியில் அவரால் முதல் 20 இடங்களுக்குள் வர முடியவில்லை. இதனால் அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இறுதியாக, டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா 2026ம் ஆண்டின் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். ஜோஹெய்ரி மோலா, 2026ம் ஆண்டின் உலக அழகியாக முடிசூட்டப்பட்டுள்ளார்.
இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முதல் ரன்னர்-அப்பாக ஸ்பெயினின் எலிசபெத்தும், இரண்டாவது ரன்னர்-அப்பாக மலேசியாவின் டானுசியா செட்டியும் தேர்வாகி அசத்தினர்.
கடந்த, 2025ம் ஆண்டுக்கான 72வது உலக அழகிப் போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒபல் சுஷாதா சுவாங்ஸ்ரீபட்டம் வென்றிருந்தார் என்பது குறப்பிடத்தக்கது.