Weather
Weather Update | அடுத்த 3 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை அப்ட...

உள் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாளை மற்றும் நாளை மறுதினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதே போல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், உள் தமிழகத்தில் 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
