Weather
Weather Update | குடை எடுத்துக்கோங்க மக்களே! தமிழகத்தில் இன்று மழை.. எங்கெல்லாம் தெரியுமா?

Weather Update | சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும்
நாளை மறுதினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், உள் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
