Health
மாநகராட்சி பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு
ஆவாரம்பாளையம்: மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்கும் வகையில் உள்ள தேங்காய் தொட்டி, பிளாஸ்டிக் டப்பாக்கள், பழைய டயர்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் விதம், அதன் பரவலை தடுக்கும் முறைகள், காய்ச்சல் ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன.
டெங்கு கொசு உற்பத்தியாகும் விதம் குறித்து விளக்கப்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கொசு வேடம் அணிந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் லோகநாதன், சுகாதார மேற்பார்வையாளர் முத்துசாமி, தலைமை ஆசிரியர் உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.