Politics
“இடைத்தேர்தல் இப்போதைக்கு வராது” - நிர்வாகிகளிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி!

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (06-09-26) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கு இடையே தொகுதிகள் வாரியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 110 மாவட்டங்களாக விரிவுப்படுத்தி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 85 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற நிலையில், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவினுடைய துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, மாவட்டச் செயலாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதாவது எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது, ‘இடைத்தேர்தல் இப்போதைக்கு வராது, 6 மாதத்துக்குப் பின் உள்ளாட்சி தேர்தல் வரலாம். பொதுச் செயலாளராக நான் உழைப்பை கொடுப்பது போல் கட்சி நிர்வாகிகள் அனைவரும் உழைக்க வேண்டும். ஒன்றிய, நகர, பேரூர், வட்டம், கிராமங்களில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த வேண்டும்’ என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)