சுற்றுலா விருது விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை: 'தமிழ்நாடு சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்' என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், 2022ம் ஆண்டு முதல், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், அனைத்து சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா தொழில் முனைவோர் மற்றும் ஹோட்டல் முகவர்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், சிறந்த தங்கும் இடம், சிறந்த உணவகம் உட்பட, 13 பிரிவுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.