சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கரூர்:தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
துறையின் மூலம், அரசு விருது வழங்கி வருகிறது.அந்த வகையில்,
தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு
சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த தங்குமிடம்,
சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா
ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலா தலம்,
பல்வேறு சுற்றுலா பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளா், சிறந்த சிறப்பு
சுற்றுலா நிறுவனம், சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா
நிறுவனம், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம் சுற்றுலா ஏற்பாட்டாளர்,
சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த
கல்வி நிறுவனம் போன்ற, 13 வகையான தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்
வழங்கப்படவுள்ளன.
வரும், 30ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும்
விபரங்களுக்கு சுற்றுலா அலுவலகம், முதல் தளம், மாவட்ட கலெக்டர்,
கூடுதல் கட்டடம், கரூர் -639007 என்ற முகவரியிலும், 04324 256257 என்ற
எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
