சீமை கருவேல மரங்கள் அகற்றம்
குறிஞ்சிப்பாடி: செங்கால் ஓடையில் மண்டியிருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது
குள்ளஞ்சாவடி அருகே அமைந்துள்ள பெருமாள் ஏரியின் முக்கிய நீர் வரத்தாக பரவணாறு, செங்கால் ஓடை உள்ளன. இதில் குறிஞ்சிப்பாடி பரவணாறு பாசன பிரிவு நீர்வளத்துறை சார்பில், செங்கால் ஓடையில் மண்டியுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது : பருவமழை தொடங்க உள்ள நிலையில் நீர்நிலைகள் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.