இன்று விநாயகர் ஊர்வலம்; நகரில் போக்குவரத்து மாற்றம்
ஈரோடு:விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு, ஈரோட்டில் இன்று (17) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து, மாவட்ட காவல்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சேலம், -திருச்செங்கோடு, நாமக்கல்லில் இருந்து பள்ளிபாளையம் வழியாக
ஈரோடு வரும் பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள்
பள்ளிபாளையம், குமாரபாளையம் வழியாக பவானி சாலை வந்து, பஸ்
ஸ்டாண்ட் செல்ல வேண்டும். அல்லது எஸ்.பி.பி., காலனி பேப்பர் மில், பொன்னி
சுகர்ஸ், வெண்டிபாளையம் பாலம், சோலார், அன்னமார் பெட்ரோல் பங்க், காளைமாட்டு சிலை வந்து ஈரோடு பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
திருப்பூர், பெருந்துறை வழியாக வரும் பஸ்கள் திண்டல்-காரப்பாறை
பிரிவு வழியாக கனிராவுத்தர் குளம், சத்தி சாலை வழியாக பஸ் ஸ்டாண்ட்
செல்ல வேண்டும். பெருந்துறையிலிருந்து திருச்செங்கோடு, நாமக்கல்
செல்லும் கனரக வாகனங்கள் திண்டல் கபே ரிங்ரோடு வழியாக ஆணைக்கல்
பாளையம், பரிசல் துறை நால்ரோடு வழியாக செல்ல வேண்டும். தாராபுரம்,
காங்கேயம், கொடுமுடி, கரூர், திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து வரும்
பஸ்கள் காளைமாட்டு சிலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, ஈ.வி.என் சாலை வழியாகவோ
அல்லது பி.எஸ் பார்க் வழியாகவோ போலீசார் அப்போது அனுமதிக்கும் தடம் வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும்
ஊட்டி செல்லும் புற நகர பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து சத்தி சாலை,
சித்தோடு சென்று தேசிய நெடுஞ்சாலை 47 வழியாக செல்ல வேண்டும். ஈரோடு பஸ்
ஸ்டாண்டில் இருந்து திண்டல் வழியாக பெருந்துறை செல்லும் டவுன் பஸ்கள்,
சத்தி சாலை, கனிராவுத்தர் குளம் வழியாக வில்லரசம்பட்டி
நால்ரோடு, நசியனுார் ரோடு, வீரப்பம்பாளையம் பிரிவு வழியாக
பெருந்துறை சாலையை அடைய வேண்டும்.
திண்டுக்கல், தாராபுரம், கொடுமுடி, கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள்
அனைத்தும் சத்தி ரோடு, மஜீத் வீதி, கிருஷ்ணா தியேட்டர், டவுன் போலீஸ்
ஸ்டேஷன், காந்திஜி சாலை, காளைமாட்டு சிலை வழியாக செல்ல வேண்டும்.
பஸ் ஸ்டாண்டில் இருந்து சங்ககிரி, நாமக்கல், சேலம் செல்லும் பஸ்கள்
அனைத்தும் பவானி ரோடு, லட்சுமி நகர், சேலம் பைபாஸ் வழியாக
பாளையம் வழியாக செல்ல வேண்டும். இதர இலகு ரக
வாகன ஓட்டுனர்கள் விநாயகர் ஊர்வலம் வரும் வழிகளை தவிர்த்து, மாற்று
பாதையில் செல்ல வேண்டும். அனைத்து வாகனங்களும் காவேரி சாலையை தவிர்க்க
வேண்டும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
