விநாயகர் சிலை விசர்ஜனம் நாளை போக்குவரத்து மாற்றம்
கோவை: மாநகரில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் விசர்ஜனம் முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநகரில் நாளை மதியம் 12 மணி முதல் விநாயகர் சிலை விசர்ஜனம் தொடங்குகிறது. முடியும் வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.
காலை 8 முதல் இரவு 10 மணி வரை மாநகரில் கனரக, சரக்கு வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் வரும் கனரக வாகனங்கள், எல்.அண்டு.டி. பைபாஸ், ஈச்சனாரி சர்வீஸ் ரோடு வழியாக வந்து விநாயகர் கோவில் முன் யு–டர்ன் செய்து, செட்டிபாளையம் ரோடு வழியாக போத்தனுார் கடைவீதி, நஞ்சுண்டாபுரம் சாலை, ராமநாதபுரம் வழியாகவும், குறிச்சி பிரிவு ஆத்துப்பாலம் வழியாகவும் உக்கடம் அடையலாம்.
ஆட்டோ, கார், பைக் பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் வரும்போது, ஈச்சனாரி, எல்.ஐ.சி., காலனி வழியாக தக்காளி மார்க்கெட்டில் வலதுபுறம் திரும்பி சாரதா மில் ரோடு, போத்தனுார் கடைவீதி, நஞ்சுண்டாபுரம் சாலை, ராமநாதபுரம் வழியாக உக்கடம் அடையலாம்.
மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக உக்கடம் வரும் பஸ்கள், காமராஜபுரம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, பொள்ளாச்சி ரோடு எல்.ஐ.சி., காலனி ஜங்ஷன் வந்தடைந்து தக்காளி மார்கெட் வலதுபுறம் திரும்பி சாரதாமில் ரோடு வழியாக நஞ்சுண்டாபுரம் சாலையில் ராமநாதபுரம் வழியாக செல்லலாம்.
உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் குறிச்சி பிரிவில் இடதுபுறமாக திரும்பி போத்தனுார் சாலை, செட்டிபாளையம் ரோடு, ஈச்சனாரி சென்று பொள்ளாச்சி சாலையை அடையலாம்.
உக்கடத்தில் இருந்து பாலக்காடு செல்லும் வாகனங்கள், பேரூர் பைபாஸ், புட்டுவிக்கி சாலை, கோவைபுதுார் வழியாக, பாலக்காடு ரோட்டை அடையலாம்.
போத்தனுார் ரயில் கல்யாண மண்டபம், சாரதா மில்ரோடு, சுந்தராபுரம், சங்கம் வீதி முதல் பெரியார் சிலை உள்ளிட்ட ஊர்வலப்பாதையில் காலை, 6 முதல் இரவு 10 வரை சாலையின் இருபக்கமும் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை.