Crime, law and justice
பைக் டாக்சியை முறைப்படுத்த குழு அமைத்துள்ளதாக தகவல்
மதுரை: 'பைக் டாக்சி' சேவையை முறைப்படுத்த குழு அமைத்துள்ளதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக, மதுரை நவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'பைக் டாக்சியை முறைப்படுத்துவது தொடர்பாக தென் மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்நாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும். இதற்கு, ஆறு மாதம் அவகாசம் தேவை' என, குறிப்பிட்டார். நீதிபதிகள் அக்., 7க்கு வழக்கை ஒத்திவைத்தனர்.