Religion
விநாயகர் சிலைகளை வரவேற்க காத்திருக்கிறது சாடிவயல் சின்னாறு
சாடிவயல்: சாடிவயல் சின்னாற்றில், விநாயகர் சிலைகள் கரைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 185 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிலைகள் மேளதாளங்களுடன் இன்று ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, சாடிவயல், சின்னாற்றில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.
தொண்டாமுத்தூர் வட்டாரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன.
இதனையொட்டி, பேரூர் முதல் சாடிவயல் வரை, 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சிலைகளை கரைக்க ஏதுவாக சாடிவயல், சின்னாற்றில், பொக்லைன் இயந்திரத்தின் மூலம் ஆழப்படுத்தி, மண் தடுப்பு அமைத்து, நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கூடுதல் மின் விளக்குகள், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதேபோல, பேரூர் பெரியகுளம் மற்றும் நரசாம்பதி குளங்களிலும், விநாயகர் சிலைகளை கரைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.