Politics
செப். 9ல் தவெக கூட்டணி குறித்து முக்கிய முடிவு; விசிக பங்கேற்கும்! திருமாவளவன்
செப். 9ல் தவெக கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியது பற்றி...
செப். 9 ஆம் தேதி நடைபெறும் தவெக கூட்டணி குறித்த கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது கூட்டம் வருகிற செப். 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ள மற்றும் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை காங்கிரஸைத் தொடர்ந்து சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் வந்தனர். விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன்,
"தவெக அரசு அமைய ஆதரவு தந்த கட்சிகளின் கூட்டம் ஏற்கெனவே ஒருமுறை நடந்தது. வருகிற 9 ஆம் தேதி இரண்டாவது கூட்டம் முதல்வரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும்.
கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. இந்த கூட்டத்தில் விசிக பங்கேற்கும். பிரதமர் வேட்பாளர் குறித்து செப். 9 -க்குப் பிறகு பேசலாம்" என்று கூறினார்.
தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "கூட்டணி சார்பாக ஏற்கெனவே ஒரு கூட்டம் நடந்திருக்கிறது, இது 2-வது கூட்டம். கூட்டணியின் பெயர், எதிர்கால திட்டங்கள், அதற்கான செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். 2029 தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. அதற்கு தான் கூட்டணியை உருவாக்கப் போகிறோம். செப். 9 ஆம் தேதி மாலை முக்கிய முடிவுகள் தெரிய வரும். ஐயுஎம்எல் தலைவரையும் அழைக்கப் போகிறோம்" என்றார்.
Key decision on TVK alliance on Sept. 9; VCK will participate: Thirumavalavan
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

