Religion
நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு

தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில், 1,341 இடங்களில் போலீசார் அனுமதியுடன் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தது. வழிபாட்டிற்கு பிறகு சிலை-களை ஒகேனக்கல் காவிரி ஆறு, இருமத்துார் தென்பெண்ணை ஆறு, தொப்பையாறு, சின்னாறு உட்பட, 13 நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்-பட்டிருந்தன.
* பாப்பிரெட்டிப்பட்டியில், 126-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்-பட்டது. இதனிடையே பொம்மிடி, வெங்கட சமுத்திரம், மஞ்சவாடி உள்ளிட்ட பல்வேறு கிரா-மங்களில் வைத்த சிலைகளுக்கு நேற்று பூஜை செய்து, அவற்றை பக்தர்கள் ஊர்வலமாக வாக-னங்களில் எடுத்து சென்று வாணியாறு அணையில் கரைத்தனர். நேற்று மாலை வரை, 60 சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாது-காப்பு போடப்பட்டு இருந்தது.* ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து வினா-டிக்கு, 7,000 கன அடியாக உள்ளதால், பாதுகாப்பு கருதி முதலைப்பண்ணை காவிரியாற்றில் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் கிரேன் உதவி-யோடு, 461 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சிலை-யுடன் காவிரியாற்றில் இறங்க அனுமதி மறுக்-கப்பட்டது. பென்னாகரம் டி.எஸ்.பி., தங்கவேல் தலைமையில் போலீசார், தீயணைப்பு படை-யினர் மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏரியூர் அடுத்த நாகமரை காவிரியாற்றில், 109 சிலைகள் உட்பட மொத்தம், 570 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
* அரூர் சப்-டிவிஷனில், சதுர்த்தியையொட்டி, 349 விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் பூஜித்-தனர். நேற்று காலை முதலே பக்தர்கள் விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மேள, தாளங் களுடன் பட்டாசு வெடித்து, இருமத்துார் தென்பெண்ணையாற்றில் கரைத்தனர்.