மாணவி மாயம் போலீஸ் விசாரணை
விழுப்புரம்: கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் அபிதா, 21; பேரணி தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார்.
கடந்த 9ம் தேதி வீட்டிலிருந்து கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.