Politics
இந்தியா - இத்தாலி உறவு எப்போதையும் விட வலுவாக உள்ளது: ஜார்ஜியா மெலோனி

இந்தியா - இத்தாலி இடையேயான உறவு “எப்போதையும் விட வலுவாக” இருப்பதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்து வருவதற்காக தனக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜார்ஜியா மெலோனி நன்றி தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், தொடர்ந்து நீண்ட காலம் இத்தாலி பிரதமராக பதவி வகித்தவர்களில் முக்கியமானவராக மெலோனி உருவெடுத்துள்ளார். இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாலி பிரதமராக பதவியேற்ற ஜார்ஜியா மெலோனி, தற்போது 1,413 நாட்களாக பிரதமர் பதவியில் நீடித்து வருகிறார்.
பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மெலோனி, இந்தியா மற்றும் இத்தாலி இடையேயான இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு “எப்போதையும் விட வலுவாக” இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இத்தாலி இடையேயான அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மெலோனியின் இந்தக் கருத்து இரு நாடுகளின் உறவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

