Politics
இத்தாலியின் நீண்ட கால பிரதமா்: மெலோனிக்கு பிரதமா் மோடி வாழ்த்து
இத்தாலியின் நீண்ட கால பிரதமராக பதவி வகித்து வரும் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது குறித்து...
இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி - கோப்புப் படம்
உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியின் வரலாற்றில் மிக நீண்ட காலம் தொடா்ச்சியாகப் பிரதமா் பதவியை வகித்தவா் என்ற பெருமையை எட்டியுள்ள ஜாா்ஜியா மெலோனிக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தாலியில் பிரதமராகப் பதவி வகித்தவா்களில், 49 வயதாகும் மெலோனி கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபா் 22-ஆம் தேதி முதல் தொடா்ச்சியாக 1,413 நாள்கள் பதவி வகித்து மிக நீண்ட கால பிரதமராகப் பதவி வகித்தவா் என்ற பெருமையை வியாழக்கிழமை எட்டினாா். இத்தாலியில் பிரதமா் பதவியை வகிக்கும் முதல் பெண் இவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இத்தாலியின் போருக்குப் பிந்தைய வரலாற்றில் மிக நீண்ட காலம் தொடா்ந்து பிரதமராகப் பதவி வகித்தவா் என்ற பெருமையை எட்டியுள்ள மெலோனிக்கு வாழ்த்துகள். மெலோனியின் தலைமைத்துவம் மீது இத்தாலி மக்களின் நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டை இந்த மைல்கல் பிரதிபலிக்கிறது.
இந்தியா - இத்தாலி இடையேயான சிறப்பு வியூகக் கூட்டுறவை வலுப்படுத்துவதில் மெலோனியின் நட்புறவு முக்கியப் பங்காற்றுகிறது. இரு நாட்டு மக்களுக்கு சிறந்த எதிா்காலத்தை கட்டமைக்க இரு நாடுகளிடையேயான இந்த நெருங்கிய நட்புறவு தொடா்வதை எதிா்நோக்கியுள்ளேன். வரும் ஆண்டுகளிலும் இத்தாலி பிரதமராக வெற்றிகரமாகப் பணியாற்ற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, 4,399 நாள்கள் தொடா்ச்சியாகப் பிரதமராக பதவி வகித்து, இந்தியாவில் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமா்களில் மிக நீண்ட காலம் பிரதமா் பதவி வகித்தவா் என்ற மைல்கல்லை கடந்த ஜூன் 10-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி எட்டினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமா் மோடியின் வாழ்த்துக்கு ஜாா்ஜியா மெலோனி நன்றி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமா் மோடியின் வாழ்த்து மற்றும் நட்புறவுக்கு நன்றி. இத்தாலி - இந்தியா இடையேயான நட்புறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வலுவடைந்துள்ளது.
இத்தாலியில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வியூக கூட்டுறவே, இருதரப்பு நட்புறவுக்கான அங்கீகாரமாகும். சிறப்பான கூட்டு செயல்பாட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, வளா்ச்சிக்கான புதிய வழிகளை உருவாக்க இரு நாடுகளின் நிபுணத்துவத்தையும் ஒருங்கிணைப்பதே அந்தக் கூட்டுறவின் நோக்கமாகும்.
இரு நாடுகளும் இணைந்து, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதன் மூலம், நமது கண்டங்களுக்கு இடையிலான பிணைப்பும் தொடா்ந்து வலுப்படும் என்று குறிப்பிட்டாா்.
PM Modi congratulates Giorgia Meloni on becoming Italy’s longest-serving Prime Minister
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.