Health
ஊராட்சிகளில் டெங்கு ஒழிப்பு பணி

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் அதிகாரப்பட்டி, வெங்கடசமுத்திரம், துரிஞ்சிப்பட்டி பகுதியில், சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் கவுரி சங்கர் தலைமையில் சுகாதாரத்துறையினர் அப்-பகுதிகளில் கொசு மருந்து அடித்து டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் ஆதாரங்களில் கொசு உட்புகாத வண்ணம் பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தினர்.
இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் கவுரி சங்கர் கூறியதாவது: கொசுக்கடி தடுப்பு குழுக்கள், 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பாதிக்கப்பட்ட கிரா-மங்களில் கொசு இனப்பெருக்க தடுப்பு நடவடிக்-கைகள் புகை மூட்டத்தெளிப்பு, பொது சுத்தப்ப-டுத்தும் பணிகள், குளோரின் ஏற்றம் மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு-கிறது. பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில், டெங்கு முழுமையாக கட்டுப்-பாட்டில் உள்ளது. பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.