Arts, culture, entertainment and media
வசூலில் அசத்தும் சூரி நடித்த ‘மண்டாடி’

சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், அவர்களுக்குக்கிடையிலான படகுப்போட்டியை முக்கிய கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் படத்திற்கு டிமாண்ட் அதிகரித்து வர திரையரங்குகளில் கூடுதல் காட்சி சேர்க்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார். மேலும் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர்.
இந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி உலகளவில் தற்போது வரை ரூ.65 கோடியை கடந்து வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரியின் கரியரில் குறுகிய காலத்தில் அதிக வசூல் செய்த படமாக இப்படம் மாறியுள்ளது. மேலும் இப்படம் அவரது அதிக வசூல் செய்த படமாக மாறும் என்றும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக முதல் ரூ.100 கோடி வசூல் செய்த படமாக இது மாறும் எனத் தெரிவிக்கின்றன.
The love for #Mandaadi keeps growing every day. ❤️
Mandaadi Vagaiyara is ruling the theatres, and the madness is real! 💥#Mandaadi is Running Successfully in theatres near you! 💥@sooriofficial#Suhas#Sathyaraj@Mahima_Nambiar… pic.twitter.com/8hVMXi27co
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)