Politics
கடலுாரில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினர். மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகி்ததார். அயலக அணித் தலைவர் கலாநிதி, துணை செயலாளர் இளம் பரிதி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கதிரவன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், அய்யப்பன், புகழேந்தி, ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பாலமுருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் விக்ரமன், பகுதி செயலாளர் நடராஜன், வெங்கட்ராமன், மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக சட்டசபையில், முதல்வர் விஜய், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பற்றி பேசிய பேச்சை கண்டிப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., வினர் கோஷங்கள் எழுப்பினர்.