Religion
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று (செப் 17) மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது; மதுரையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால், விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்கு பின், இன்று (செப் 17) கோலாகலமாக நடைபெற்றது. காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்; கும்பாபிஷேகத்தை தரிசிக்க 9,000 பேர் கோவில் மேல் தளத்தில் அனுமதிக்கப்பட்டனர்; காலை, 10:00 மணிக்கு மேல் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று இரவு, 10:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரவு வரை கோவிலை சுற்றியுள்ள சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கும், நிறுத்துவதற்கும் அனுமதி இல்லை. மதுரை நகருக்குள் சரக்கு, கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு