Religion
.கே.ஆர்.பி., அணையில் 90 விநாயகர் சிலைகள் கரைப்பு

கிருஷ்ணகிரி; விநாயகர் சதுர்த்தியின், 3வது நாளான நேற்று, கே.ஆர்.பி., அணையில், 90 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த, 14ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,780 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். விநாயகர் சதுர்த்தியின், 3ம் நாளான நேற்று, விநாயகர் சிலைக்கு பூஜை செய்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு, டி.எஸ்.பி., ராமச்சந்திரன், தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலை-மையில், 50 போலீசார் மற்றும் வருவாய்த்துறை-யினர், பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை, ஆம்புலன்ஸ் நிர்வாகம், தீயணைப்-புத்துறை, ஊர்க்காவல் படையினர் என மொத்தம், 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடு-பட்டிருந்தனர்.
இவர்கள், விநாயகர் சிலைகளை கொண்டு வருப-வர்களை குறிப்பிட்ட துாரத்தில் தடுத்து நிறுத்தி, சிலைகளை கரைக்க தனியாக நியமிக்கப்பட்ட ஆட்களை கொண்டு, ராட்சத கிரேன் மூலம் சிலைகளை எடுத்து தண்ணீரில் கரைத்தனர். அணை நீரில் குறிப்பிட்ட துாரத்திற்கு கயிறு கட்டி, தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை, 5:00 மணி வரை, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இருந்து, 90 சிலைகள் கரைக்கப்பட்டன. இரவு, 9:00 மணி வரை, சிலைகள் கரைக்க ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
தளியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஹிந்து அமைப்பு கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பிர-திஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, மூன்றாம் நாளான நேற்று கரைக்க, போலீசார் ஏற்பாடுகள் செய்தனர். அதன்படி மொத்தம், 10 சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்-வலமாக எடுத்து செல்லப்பட்டு, தளி பெரிய ஏரியில் கரைக்கப்பட்டன.
ஓசூர் டவுன் பகுதியில் பொதுமக்கள் சார்பில் பிர-திஷ்டை செய்த, 25க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், தனித்தனியாக எடுத்து செல்லப்பட்டு, தர்கா சந்திராம்பிகை ஏரி மற்றும் மற்ற நீர்நிலை-களில் கரைக்கப்பட்டன. இன்று (செப்.17) பாகலுார், பேரிகை பகுதியில் பிரதிஷ்டை செய்-யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. அதேபோல், நாளை (செப்.18) மதகொண்டப்பள்ளி பகுதியில் பிர-திஷ்டை செய்யப்பட்டுள்ள, 20க்கும் மேற்பட்ட சிலைகள், அப்பகுதியிலுள்ள கவுரம்மா ஏரியில் கரைக்கப்பட உள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.