Economy, business and finance
செவ்வாழை, நேந்திரன் விலை சரிவால் ஏமாற்றம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், வாழைத்தார் வரத்து அதிகரித்த நிலையில், விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று செவ்வாழை கிலோ - 60, நேந்திரன் --- 40, ரஸ்தாளி --- 50, பூவன் --- 35, கதளி --- 50 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் --- 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை காட்டிலும், செவ்வாழை கிலோ - 12, நேந்திரன் -- 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. ரஸ்தாளி கிலோ -- 10, பூவன் --- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் நேற்று, 400க்கும் அதிகமான வாழைத்தார் வரத்து இருந்தது. குறிப்பாக, செவ்வாழை, நேந்திரன் விலை குறைந்து. இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்,' என்றனர்.