Religion
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் பாஸ் உள்ளவர்கள் எங்கெங்கு பார்க்கிங் செய்யலாம்
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை( செப்., 17) நடப்பதையொட்டி இன்றிரவு 10:00 மணி முதல் நாளை இரவு 10:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கும் நிறுத்துவதற்கும் அனுமதி இல்லை. மதுரை நகருக்குள் சரக்கு, கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
மாற்றுப்பாதைகளில் பஸ்கள் மாட்டுத்தாவணியில் இருந்து ஆரப்பாளையம் வழியாக திண்டுக்கல் வழி செல்லும் அரசு, தனியார் பஸ்கள் பழ மார்க்கெட் சந்திப்பு, மேலமடை சந்திப்பு, ஆவின் வழியாக மதுரை வைகை வடகரை, தத்தனேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.
ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து மாட்டுத்தாவணிக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் ஆரப்பாளையம் பாலம், தத்தனேரி ரோடு வழியாக வழக்கமான வழித்தடங்களில் செல்லலாம். பாத்திமா கல்லுாரி சந்திப்பில் இருந்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள் கூடல் நகர் பாலம், ஆனையூர் ரோடு, அய்யர் பங்களா சந்திப்பு, மூன்றுமாவடி சர்வேயர் காலனி சந்திப்பு, 120 அடி சாலை வழியாக செல்ல வேண்டும்.
திருப்பரங்குன்றத்திலிருந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் வரும் வாகனங்கள் பழங்காநத்தம் ரவுண்டானா சந்திப்பிலிருந்து எல்லீஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வரை சென்று மீண்டும் டி.பி., ரோடு, காளவாசல் சந்திப்பு வழியாக திருப்பரங்குன்றம் செல்லலாம்.
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிலிருந்து திருமங்கலம் செல்லும் அனைத்து வாகனங்களும் அருப்புக்கோட்டை ரிங் ரோடு வழியாக செல்லலாம். மாட்டுத்தாவணியில் இருந்து ஆரப்பாளையம் செல்லும் டூவீலர்கள், கார்கள் கே.கே.நகர் ஆர்ச், தமுக்கம், ஆழ்வார்புரம், வைகை வடகரை சாலை, தத்தனேரி, ஆரப்பாளையம் பாலம் வழியாக செல்ல வேண்டும்.
ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் செல்லும் வாகனங்கள் ஆரப்பா ளையம், தத்தனேரி ரோடு வழியாக வழக்கமான வழித்தடங்களில் செல்லலாம். காளவாசலில் இருந்து அரசரடி சந்திப்பு, ஜெயில் ரோடு வழியாக கோரிப்பாளையம், அழகர்கோவில் ரோடு, மேலுார் செல்லும் வாகனங்கள் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, கர்டர் பாலம், எல்.ஐ.சி., பாலம் வழியாக செல்லலாம்.
போலீசார் வழங்கிய கார் 'பாஸ்' உள்ளவர்கள் வடக்கு மாசி வீதி, தளவாய் தெரு, வடக்கு ஆவணி மூல வீதி வழியாக மீனாட்சி வாகன நிறுத்தத்தில் நிறுத்தலாம். கார் 'பாஸ்' உள்ள அரசு வாகனங்கள் அதிகாலை 5:00 மணி வரை மாசி வீதிகளில் நிறுத்தலாம். பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்கள் அனைத்திற்கும் கியூ.ஆர்.கோடு தயார் செய்யப்பட்டு 'லிங்க் ஷேர்' செய்யப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பக்தர்கள் தங்களது வாகன நிறுத்தங்களை தேர்வு செய்யலாம்.
'பாஸ்' பெற்றவர்களுக்கான 'பார்க்கிங்' இடங்கள் கோயில் மேல்தளத்தில் இருந்து கும்பாபிஷேகத்தை காண 'பாஸ்' பெற்றவர்கள் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருந்து அண்ணாதுரை சிலை சந்திப்பு வழியாக வருபவர்கள் கீழவெளி வீதி, நெல்பேட்டை, அம்சவள்ளி சந்திப்பு அருகே நிறுத்த வேண்டும். அண்ணாதுரை சிலை சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் சந்திப்பு, தமுக்கம், கோரிப்பாளையம், மூங்கில் கடை தெரு, தேனி ஆனந்தம் வழியாக ஓபுளாபடித்துறை, இஸ்மாயில்புரம், கீழவெளி வீதி, அம்சவள்ளி சந்திப்புக்கு செல்ல வேண்டும்.
தமுக்கம் சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில் தல்லாகுளம் அவுட் போஸ்ட் வழியாக, மாவட்ட நீதிமன்றம், ஆவின் சந்திப்பு, -அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு,- குருவிக் காரன் சாலை, -முனிச்சாலை சந்திப்பு வழியாக காமராஜர் ரோட்டில் 'பார்க்கிங்' செய்ய வேண்டும்.
காமராஜர் ரோடு, கீழவெளி வீதி 'பார்க்கிங்' நிறைவு பெற்ற பிறகு வரும் வாகனங்கள் தெற்குவெளி வீதி, தெற்கு மாரட் வீதி, கட்டபொம்மன் சிலை சந்திப்பு பகுதி மற்றும் திருப்பரங்குன்றம் ரோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் 'பார்க்கிங்' செய்யலாம்.