Religion
இடையர்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
இடையர்பாளையம்: குனியமுத்தூர் அருகே இடையர்பாளையத்திலுள்ள கிருஷ்ணர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தை கிருஷ்ணரை தொட்டிலில் இடுதலுடன் 4ம் தேதி துவங்கியது. மாலை, ராதை, கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளுடன் கிருஷ்ண பகவான் திருவீதி உலா நடந்தது.
நிறைவு நாளான நேற்று காலை சிறப்பு பூஜை, உறியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நடந்தன. மாலை, யாதவ இளைஞரணியின், 39ம் ஆண்டு துவக்க விழா, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. திரளானோர் பங்கேற்றனர்.