Health
திருப்புத்துாரில் ஒருவருக்கு டெங்கு
திருப்புத்துார்,செப்.11- திருப்புத்துாரில் பெண் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து
திருப்புத்துாரில் பெண் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் நடந்த சுகாதார, துப்புரவு பணிகளை நகர் முழுவதும் விரிவுபடுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார் பகுதியில் பரவலாக தொண்டை வலி,தலைவலி அறிகுறிகளுடன் காய்ச்சல் காணப்படுகிறது. கடும் வெப்பம், திடீர் மழை காரணமாக சீதோஷ்ண மாறுதலை அடுத்து காய்ச்சல் ஏற்பட்டதாக கருதினர். இந்நிலையில், காமராஜர் நகர் பகுதியில் பெண் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டனர்.
வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் காளியம்மன் கோயில் தெரு, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவேம்பு கஷாயம், ஓஆர்ஸ் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் மருந்து மாத்திரை வழங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். மேலும், காமராஜர் நகர் பகுதியில் கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கைகளை பேரூராட்சி பகுதி முழுவதும் விரிவுபடுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர். வார்டு வாரியாக தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும், கொசு ஒழிப்பு பணிகளை நடைமுறைப்படுத்தவும் வேண்டியுள்ளனர்.