Politics
மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல்: திமுக வேட்பாளா்கள் அறிவிப்பு
மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக சாா்பில் இ.பரந்தாமன், திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) தொகுதியில் சுகன்யா , புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் கு.சேது (எ) சேதுசெல்வம் ஆகியோா் இடைத்தோ்தளில் ஆகியோா் வேட்பாளா்களாகப் போட்டியிடவுள்ளனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் சேது என்கிற சேது செல்வம் - எக்ஸ்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக சாா்பில் இ.பரந்தாமன், திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) தொகுதியில் சுகன்யா , புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் கு.சேது (எ) சேதுசெல்வம் ஆகியோா் இடைத்தோ்தளில் ஆகியோா் வேட்பாளா்களாகப் போட்டியிடுவாா்கள் என அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூா், பெருந்துறை, மதுராந்தரம், தாராபுரம் ஆகிய 7 பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் தோ்தல் வழக்கு நிலுவையில் இல்லாத நிலையில், இவ்விரு தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் வரும் அக்.6-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (செப்.9) தொடங்கியது.
இந்த நிலையில், சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வீட்டில் புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது. இதில், எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, துணை பொதுச் செயலா்கள் ஆ. ராசா, மு.பெ.சாமிநாதன், திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, துணை செயலா் எஸ்.ஆஸ்டின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் வழக்குரைஞா் பரந்தாமனும், தாராபுரம் (தனி) தொகுதியில் வழக்குரைஞா் சுகன்யாவும் போட்டியிடுவாா்கள் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரந்தாமன், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத் தோ்தலில் திமுக வேட்பாளராக கு.சேது (எ) சேதுசெல்வம் (55) போட்டியிடுகிறாா். இதற்கான அறிவிப்பை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்., புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலில் மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சேது (எ) சேது செல்வம் திமுக வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளாா்.
2026 பேரவைத் தோ்தலில் கட்சிகளின் வாக்கு சதவீதம்
மதுராந்தகம் தொகுதியில் கடந்த பேரவைத் தோ்தலில் அதிமுக 34.95%, தவெக 31.31%, திமுக 30.18% வாக்குகளைப் பெற்றிருந்தன.
தாராபுரத்தில் அதிமுக 40.56%, திமுக 32.20%, தவெக 23.23 % வாக்குகளைப் பெற்றிருந்தன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தற்போது தவெக கூட்டணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Thattanchavady by election DMK candidate announced
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.