Arts, culture, entertainment and media
ஒரே காரில் ஒன்றாகப் பயணித்த முதல்வர் விஜய் - நடிகர் அஜித்!

தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் அமையவிருக்கும் "மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி" திட்டத்திற்காகச் சில்வர்ஸ்டோன் கார்ப்பந்தய ஓடுதளத்தை நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, அங்கு 2026 மிச்செலின் அப் லே மான்ஸ் கோப்பை பந்தயத்தில் பங்கேற்க வந்திருந்த பிரபல நடிகர் அஜித் குமாரை முதலமைச்சர் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தற்பொழுது நடிகர் விஜய்யின் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், முதலமைச்சர் விஜய்யும் நடிகர் அஜித்தும் ஒரே காரில் அமர்ந்து, பந்தய மைதானத்தின் உள்கட்டமைப்புகளைப் பார்வையிட்டபடி ஆலோசித்து மகிழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் பகிரப்பட்டு உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.
திரைத்துறையிலும் தற்போது அரசியல் துறையிலும் உள்ள முதல்வர் விஜய்யும், திரைத்துறையிலும், விளையாட்டுத் துறையிலும் மிகப்பெரிய ஆளுமைகளாகத் திகழும் நடிகர் அஜித் குமாரும் ஒரே காரில் ஒன்றாகப் பயணிக்கும் இந்தக் காட்சிகள், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)