Arts, culture, entertainment and media
Trisha | லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை காண வந்த நடிகை த்ரிஷா.. வைரல் வீடியோ

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை காண நடிகை த்ரிஷா லண்டன் சென்றுள்ளார். சில்வர்ஸ்டோன் மோட்டர் ரேஸ் மைதானத்தில் இருக்கும் அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு 6 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது போன்ற நிகழ்ச்சிகள் முதலமைச்சரின் சுற்றுப் பயணத்தில் உள்ளன. முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில், உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கு கார் ரேஸ் வீரரும் நடிகருமான அஜித் நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.
லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டர் ரேஸ் மைதானத்தில் நடைபெறும் அஜித் பங்கேற்க கூடிய கார் ரேஸினை முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். மேலும் விஜய்யுடன் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அதிகாரிகள் மைதானத்தை தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள கார் ரேஸ் மைதானத்தின் மாதிரிக்காக பார்வையிடுகின்றனர். மைதானத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்யை அஜித் குமார் ஆரத் தழுவி வரவேற்றார்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முதல்வர் விஜய் கொடியசைத்து துவக்கி வைக்கும் இந்த கார் ரேஸ் போட்டியை காண நடிகை த்ரிஷா மைதானத்துக்கு வருகை தந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Chicken Storage Tips | ஃப்ரிட்ஜில் சமைக்காத சிக்கனை எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம்?
ஃப்ரிட்ஜில் சிக்கனை எத்தனை நாட்கள் வைப்பது பாதுகாப்பானது?
அதனைச் சரியாகப் பதப்படுத்தும் முறைகள் என்னென்ன?
வீக்-எண்ட் சிக்கன் வாங்கும் முன்னாடி இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
