Arts, culture, entertainment and media
அஜித் குமார் பங்கேற்ற கார் ரேஸை தொடங்கிவைத்த முதலமைச்சர் விஜய்

திரைத்துறையில் இரு துருவங்களாக இருந்த முதலமைச்சர் விஜயும், அஜித்தும் இங்கிலாந்தின் புகழ்பெற்ற Silverstone ரேசிங் Circuit-ல் சந்தித்தி ஆரத் தழுவிக்கொண்ட தருணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அஜித் குமாரின் 'RedAnt by Virage' அணி களமிறங்கிய 'Le Mans' கார் பந்தயத்தை, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய் பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
வேகம் மட்டுமல்லாமல், ஓட்டுநர்களின் அசாத்திய மன உறுதியையும் பரிசோதிக்கும் இந்த சவாலான பந்தயம் 1 மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்றது. மொத்தம் 44 கார்கள் கலந்துகொண்ட நிலையில், ஒவ்வொரு காரையும் 2 ஓட்டுநர்கள் மாறி மாறி இயக்குவார்கள். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அதிக தொலைவைக் கடக்கும் அணியே வெற்றி பெற்றதாகக் கருதப்படும். professional கார் ரேசர்கள் மட்டுமின்றி ரேஸ் ஆர்வலர்களும் கலந்துகொள்ளலாம் என்பதே போட்டியின் சிறப்பம்சமாகும். இதில் 32 கார்களை professional ரேசர்கள் இயக்க, மீதமுள்ள 12 கார்களில் பந்தயத்தின் முதல் பாதியில் ரேஸ் ஆர்வலரும், இரண்டாம் பாதியில் professional ரேசரும் மாறி மாறி ஓட்டுவார்கள்.
Ligier JS P325 ரேஸ் காரில் களமிறங்கிய அஜித்தின் விராஜ் அணியில், ரேஸ் ஆர்வலரான அஜித் குமார் முதலில் ஒட்ட, இரண்டாம் பாதியில் professional ரேசரான Romain Vozniak காரை இயக்கினார். 44 கார்கள் பங்கேற்ற பந்தயத்தில் அஜித் குமாரின் அணி 38-வது இடத்தைப் பிடித்தது.
முழு நேர ரேசரும், ரேஸ் ஆர்வலரும் மாறிமாறி ஓட்டும் Pro Am பிரிவில் கலந்துகொண்ட 12 அணிகளில் அஜித்தின் அணி அபாரமாகச் செயல்பட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்து சர்வதேச அரங்கில் முத்திரை பதித்துள்ளது. ((ஒட்டுமொத்தப் பந்தயத்தில் ANS Motorsport அணி முதலிடத்தைக் கைப்பற்றியது.