Crime, law and justice
திருச்சூர் கோர விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி: வானதி சீனிவாசன் இரங்கல்
சென்னை,கேரளாவில் லாரி மீது கார் மோதியதில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முன்னாள் பாஜக தே

கேரளாவில் லாரி மீது கார் மோதியதில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
கேரளம் மாநிலம் திருச்சூர், கைப்பமங்கலம் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயிரழந்ததாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் தமிழக அரசு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தர்வர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.