Religion
கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் குழந்தைகள் ஊர்வலம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி, பொள்ளாச்சி சீத்தா ராமர் கோவிலில் இருந்து கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து குழந்தைகளின் ஊர்வலம் துவங்கப்பட்டது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் நிறைவடைந்தது. பூஜ்யஸ்ரீ தவேதானந்த சரஸ்வதி சுவாமி ஆசியுரை வழங்கினார். ஹிந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் ரவி முன்னிலை வகித்தார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். ஜில்லா சம்பர்க் சதீஷ் பேசினார். ஊர்வலத்தை வ.உ.சி.,யின் பேத்தி இந்துமதி துவக்கி வைத்தார். வி.எச்.பி., மாநில மகளிர் பொறுப்பாளர் சுகந்தி, மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மூலவருக்கு அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு உற்சவருக்கு அபிேஷகமும், மாலை, 6:00 மணிக்கு உறியடி உற்சவமும் நடைபெற்றன.
* பொள்ளாச்சி எஸ்.எஸ்., கோவில் வீதி விஷ்ணுபஜனை கோவிலில், கோகுலாஷ்டமி உறியடி உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி காலை, 7:00 மணிக்கு கோ பூஜை, காலை, 7:15 மணிக்கு ேஹாமம், அபிேஷக ஆராதனை, மாலை, 5:00 மணிக்கு பஜனை குழுவினரின் பக்திபாடல்கள், இரவு, 7:00 மணிக்கு உறியடி உற்சவம், இரவு, 8:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
* குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், கோகுலாஷ்டமியையொட்டி சிறப்பு அஷ்டாபிேஷகம், 108 கோ பூஜை விழா, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
விஷ்ணு பஜனை கோவில் குழுவினரின் திருப்பல்லாண்டு, திருப்பாவை பாராயணம் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு உறியடி விழா, ஹரிகந்த ஸ்ருதி பஜனை குழுவினரின் சிறப்பு பஜனையுடன் நடந்தது.
இரவு, 7:00 மணிக்கு சாயரட்சை மஹா தீபாராதனை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு ஹரிஹரவாசனம், நடை சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
* ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, ஒன்பது வகை அபிேஷகம், ஒன்பது வகை அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வால்பாறை வால்பாறை விஷ்வஹிந்த் பரிஷத் சார்பில் கிருஷ்ணஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த, கிருஷ்ணஜெயந்தி விழாவில் சுவாமி படத்திற்கு மாலை அணிவித்து, பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி இறைவனை மகிழ்வித்தனர்.
தொடர்ந்து கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகளின் வால்பாறை நகரில் முக்கிய வீதிவழியாக ஊர்வலமாக சென்று, பிற்பகல், 12:30 மணிக்கு கோவிலை சென்றடைந்தனர்.
பின்னர் கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகள், நடனமாடினர். விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு, டாக்டர் முனுசாமி, முருகன்நற்பணி மன்ற செயலாளர் சிங்காரம் ஆகியோர் பரிசு வழங்கினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விஷ்வஹிந்த் பரிஷத் ஒன்றிய செயலாளர் குட்டன்திருமேனி, தலைவர் நாகராஜ், மாவட்ட செயலாளர் சுரேஷ்,ஒன்றிய இணை செயலாளர் சக்திகுமாரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.





